Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
தனிநபர் தன்னியக்க போக்குவரத்து ஊர்தி

நவீன உலகிலே ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்குமே எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினையாகும். தனிநபர் போக்குவரத்து வாகனங்களின் சடுதியான அதிகரிப்பே இப் போக்குவரத்து நெரிசலுக்கான பிரதான காரணமாகக் காணப்படுகின்றது.
பொதுவாக, மக்கள் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காகவே தனிப் போக்குவரத்து ஊர்திகளை விரும்புகின்ற போதிலும் தனிப் போக்குவரத்து ஊர்திகளின் அதிகரித்த பாவனை போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கின்றது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எச்சரிக்கும் போக்குவரத்துத்துறை நிபுணர்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக புதிய உத்திகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது பரவலாகப் பயன்பாட்டிலிருக்கும் பொரும்பாலான பொது மற்றும் தனிநபர் போக்குவரத்து ஊர்திகள் யாவும் பொதுவான ஒரே போக்குவரத்துப் பாதைகளையோ அல்லது
ஒன்றுக்கொன்று தொடுகையுறும் போக்குவரத்துக் கடவைகளையோதான் பயன்படுத்துகின்றன. இவ்வாறான காரணங்களால் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து தடை கூட ஏற்படுகின்றது. இவற்றுக்கான தீர்வுகளிளாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் ஏனைய போக்குவரத்துப் பாதைகளுடன் தொடுகையுறாது தனியான போக்குவரத்துப் பாதைகளுடன் உருவாக்கப்படும் PRT என்றழைக்கப்படும் தனிநபர் தன்னியக்கப் போக்குவரத்து ஊர்தி வலையமைப்பாகும்.
இவ்வகை ஊர்திகளின் சிறப்பம்சம் இவை தனியான பிரத்தியேகப் பாதை வலையமைப்பினூடாக இயக்கப்படுவதுடன் ஒருவழிப்பாதையில் பயணிப்பதன் காரணமாக ஏனைய ஊர்திகளின் குறுக்கீடின்றி வேகமாகப் பயணிக்கவல்லன. அதுமட்டுமன்றி இவற்றின் பயன்பாடு பெருமளவான வாகனத் தரிப்பிடத் தேவையை இல்லாது செய்கின்றது. முற்றுமுழுதாக கணனிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வூர்திகள் மின்சக்தியில் இயங்கவல்லன. இவ்வகையான போக்குவரத்து வலையமைப்பிற்கான ஆய்வு முயற்சிகள் 1960 களிலேயே ஆரம்பித்து விட்டன என்ற போதிலும், தொழிநுட்ப முன்னேற்றமின்மை மற்றும் தனியான பாதைகள் அமைப்பதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் பெரும்பாலானோர் மத்தியில் தயக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது காணப்படும் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெர்சலைத் தவிர்ப்பதற்கு அவசியமாகக் தேவைப்படும் மாற்றீடு என்பன இவ்வூர்தி தொடர்பான ஆய்வுகளை மீண்டும் முடுக்கி விட்டுள்ளன.
இவ்வகை ஊர்திகளின் சேவை அடிப்படையில் வாடகை ஊர்திகளின் (Taxi) சேவையினை ஒத்ததாகவே காணப்படுகின்றது. வாடகை ஊர்தி ஒன்று எமக்குத் தேவைப்படும்போது, வாடகை ஊர்திக்கான தரிப்பிடத்திலிருந்தோ அல்லது வாடகை ஊர்தி சேவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டோ நாம் எனக்கான ஊர்தியை அழைக்கின்றோம். இங்கும் அதேபோன்று இத் தன்னியக்க ஊர்திகள் நிறுத்தப்படும் தரிப்பிடத்திலிருந்து அமக்கான ஊர்தியை நாம் எடுத்துக்கொள்கின்றோம். ஆனால் வாடகை ஊர்தியினைப் போன்று இவ்வூர்தியில் ஓட்டுனர் இருக்கமாட்டார். நாம் ஊர்தியினுள் ஏறி இருக்கைகளின் அருகே காணப்படும் கணனித் தொடுதிரையினூடாக நாம் போக வேண்டிய இடம், மற்றும் பிற தகவல்களை வழங்குவதன் மூலம் எமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
குறித்தவொரு பாதை வலையமைப்பிலுள்ள (route network) அனைத்து ஊர்திகளும் அப்பாதை வலையமைப்பிற்கான மையக்கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் கணனிகள் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊர்திகளை வழிநடாத்துதல், கண்காணித்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் மையக்கட்டுப்பாட்டு நிலையத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அமைவிடம் அறியும் தொழிநுட்பத்தின் (location sensing technology) உதவியுடன் ஊர்திகளது அமைவிடங்கள் துல்லியமாகக் கணிப்பிடப்பட்டு ஊர்தி வலையமைப்பு இயக்கப்படுகின்றது.
இவ்வகை ஊர்தி மற்றும் பாதை வலையமைப்பு என்பனவற்றின் வடிவமைப்பில் ஓர்திகளின் அளவு (size) பிரதானமானதாகக் காணப்படுகின்றது. ஊர்திகளின் அளவு பெரியதாக இருக்கும்பொழுது அதிகளவான பயணிகளைக் காவிச்செல்ல முடியும் எனும்போதிலும், இவ்வகையாக வலையமைப்பொன்றில் இயங்கும் ஊரிதியின் அளவு பெரியதாகக் காணப்பட்டால் அவ்வூர்திகளுக்கான வடிவமைப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகக் காணப்படும் என்பதுடன் பாரிய ஊர்திகள் பயணிக்கவல்ல பாதை வடிவமைப்பும் அதிக பொருட்செலவானதாகவே காணப்படும். எனவே, பாதை மற்றும் ஊர்திகளின் உருவாக்க மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, இவ்வகையான வலையமைப்பில் காணப்படும் ஊர்திகள் பெரும்யாலும் 2 – 5 வரையான பயணிகளைக் காவிச்செல்ல வல்லதாக காணப்படுகின்றன.
இவ்வகை ஊர்திகள் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு வரவில்லை. இருப்பினும் பொதுப்பயன்பாட்டிற்கான பரிசோதனைக்காக, விமான நிலையங்கள், தொழில் வளாகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
Cake Orders
Thanus
thanus&vijay
Aarau Time

0 கருத்துகள்:
கருத்துரையிடுக