Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா எப்படி ?
எனக்கு ஐரோப்பா முழுவதும் பார்க்க முடிந்தது நான் பார்த்த இடங்களில் மிகவும் ரசித்த இடம் ஸ்விட்சர்லாந்து, அங்கெல்லாம் ஹோட்டலில் தங்கி ஒருவாரம் இருந்தால் லட்சம் மேல் சிலவாகி விடும் எங்களுக்கு அந்தக் கவலை இருக்கவில்லை ஏன் என்றால் என் கணவரின் ஆபீஸ் நண்பர் ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தில் பெரிய போஸ்டில் இருந்தார் ,அங்கு சாமான்கள் தூக்கக் கூலிகள் கிடையாது அவரவர் சாமான்களை அவர்கள்தான் சுமக்க வேண்டும் எல்லோரும் சக்கரத்துடன் பெட்டிகளைக் கொண்டு வருவதால் தள்ளிக்கொண்டு வரமுடிகிறது மேலும் டாட்டா பை பை,,,என்று சொல்லவும்ஒரு ஈ காக்கா இருக்காது ஏனென்றல் டிக்கட் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் நுழையலாம் ,,ஆகையால் பிளாட்பார்மில் கூட்டமோ மோதலோ நெரிசலோ கிடையாது அப்படியே மிகச் சுத்தமாகத் தரை இருக்கிறது தவிர அந்த இரயிலில் எல்லா வசதியும் உண்டு டாய்லெட்டில் ஷேவ் செய்யவும் வசதி உண்டு ஏரோப்பிளேன் பறப்பது போன்று தோன்றுகிறது அத்தனை வேகம் ஆனால் உடம்பில் ஒரு குலுங்கலும் இருப்பதில்லை , ஐரோப்பாவுக்குப் போக செங்கன் விசா எடுக்கவேண்டும் இதில் பல உள்நாட்டிற்குப் போக முடியும் ஆனால் சுவிட்சர்லாந்து போக ஒரு தனி விசா எடுக்க வேண்டும் நாங்களும் அதுபோல் எடுத்து அங்குப் போய் சேர்ந்தோம்,
ஆனால் வெள்யில் வர ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டது அத்தனைப் பரிசோதனை,ரொம்பக் கண்டிப்பாக இருக்கும் பரிசோதகர்கள் எல்லோரையுமே ஒரு சந்தேகக் கண்களுடன் பார்க்கிறார்கள் ஒருவர் டிக்கட் காட்டும் போது பின்னால் இருப்பவர் சுமார் ஐந்து கெஜம் தள்ளி நிற்பார் தவிர உள்ளே நுழையும் இடம் கோயிலில் கியூ வரிசையில் நிற்க ஒரு ஆள் நுழையும்படி கயிறு கட்டி இருப்பது போல் இங்கும் ஸ்டீலில் இருகிறது எப்படியோ எல்லாம் தாண்டி வெளியே வந்தோம் பின் நேராக எங்கள் நண்பர் வீடு போனோம் போகும் இடமெல்லாம் ஒரே பசுமை ஆஹா என்ன அழகு இயற்கைக் கொஞ்சுகிறது அங்கே ,பளிங்குப் போன்ற ஏரிகளின் நீர் ஆட்டங்கள் பசும் புல் வெளிகளில் கோல்ப்f ஆட்டம் golf ஒடும் நதிகள் இயற்கையோடு அதைச் சேதப்படுத்தாத நவீனமும் சேர சுற்றுலா மிக்வும் இனிக்கிறது
மறுநாள் நாங்கள் ஐக்கியநாடுகளின் தலைமை அலுவகம் பார்த்தோம் The league of united nations} உள்ளே போகப் பாஸ் நுழைவுச்சீட்டு வாங்கி இருந்தமையால் உள்ளே போய் ஒலிப்பெருக்கில் பேசியும் பார்த்தேன் அந்த இருக்கையிலும் அமர்ந்தேன் அதற்குள் எந்தத்தேசத்தின் மெம்பர் நீ ? என்று என் கணவர் கிண்டலடித்தார் இங்கு இருக்கும் வங்கி மிகப் பெயர் போனது பல பெரிய புள்ளிகளுக்குச் சேமிப்பு இங்கு அவசியம் இருக்கும் இதன் தலை நகரம் போர்ன் Berne ஆரம்பத்தில் இப்பகுதி பர்ச்சோல்டு என்ற அரசர் ராணுவத் தளமாக ஆக்கிக் கொள்ள பின் இதுவே தலை நகரம் ஆகிவிட்டது நாங்கள் வரும் போது சிலப் பொது இடங்களில் மலை அடிவாரத்தில் சிலர்
நமது நாதஸ்வரம் போன்ற ஒன்றை வைத்து அழகாக இசைக்கின்றனர்.அது அவர்களது தேசிய வாத்தியமாம் பெயர் அல்ப்ஹோர்ன் Alphorn அது பின்னால் வளைந்து ஒரு 2 மீட்டருக்கும் மேல் நோக்கி வளைந்திருக்கிறதுமலை அடிவாரத்தைப் பார்த்தோமானால் இயற்கையில் மேலே நீலவனம் கீழே தெளிந்த நீரூற்று அதில் மோதி வந்து நம்மை அணைக்கும் தென்றல் அத்துடன் அந்த இசை நம் சுவாசத்தைத் தழுவி நம்மையும் தழுவிச் செல்கிறது சுற்றிலும் இருக்கும் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள்,,,, அதில் பனி மூடி அந்த மலை அரசன் வெள்ளி முகுடம் தறித்தாற்போல் ஜ்வலிக்கிறான் இங்கு நாலு மொழிகள் பேசப்படுகின்றன அவைகள் ஜெர்மன் பிரஞ்சு இத்தாலி உரோமன்ஸ்
நாங்க்ள் பேசில் என்ற ஊருக்கு போயிருந்தோம் போகும் இடமெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கி எங்களை வரவேற்றன சுகந்தம் தழுவியத் தென்றல் எங்களைத் தழுவிச் சென்றன டிராம்கள் ஊர்ந்து போகின்றன எங்குத் திரும்பினாலும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் நம்முடன் வருகின்றன இங்கு இருக்கும் ஒரு பழமையான பல்கலைக் கழகம் பார்த்தேன் 1460ல் கட்டப்பட்டது என்றார்கள் இன்றும் மிகப் பொலிவுடன் இருக்கிறது பலவிதமான கடைகளும் உண்டு
அதில் எல்லாம் பழங்காலக் கலைப் பொருட்களே antiques விற்கப்படுகின்றன நான் போன நேரம் ஹோலிப் பண்டிகை இந்தியாவில் இருந்தது ஆனால் அங்கும் எல்லா இந்தியர்களும் சேர்ந்து ஹோலியும் கொண்டாடினர் பலவிதமான போட்டிகளுடன் பரிசுகளும் கொடுக்கப்பட்டன,அங்கு ஒரு தமிழ்ச் சங்கமும் உண்டு ஆனால் நான் பார்க்க முடியவில்லை அன்று ரெஸ்ட் எடுத்தோம்அந்த நேரம் என் நண்பர் குடும்பத்துடன் ஒரு இரண்டு மணி நேரம் வெளியில் போனார்.நான் மட்டும் வீட்டில் இருந்தேன் அப்போது ஒரு பிரஞ்சு பெண்மணி காரில் வந்தாள் படகு போல் பெரிய கார் வீடுவந்து மணி அடித்தாள் நான் திறந்தவுடன் " மெர்ஸி பெக்கு"என்று சொல்லி வேகமாக உள்ளே போனாள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவள் பின்னாடியே போனேன் அவ்ள் தன் உடுப்பைக்க்கழட்டி வேறு போட்டுக்கொண்டு ஒரு ஏப்ரான் என்றுச் சொல்லப்படும் ஒரு மேல் அங்கியைச் சுற்றிக் கொண்டு டாய்லெட்
போனாள் நான் என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன் அவர் அதற்கு வந்தவள் டாய்லெட் அலம்புவள் கவலை வேண்டாம் " என்றார் அப்பாடி அவள் அணிந்த உடையும் மேக்கப்பும் வந்த காரும் அப்ப்டியே என்னை மயக்க வைத்தது அவள் சம்பாத்தியம் மிக அதிகம் தான் மறு நாள் நாங்கள் சாஷலீஸே என்ற மிகப்பழையகாலத்துக் கோட்டையும் பார்த்தோம் பின் தான் எங்களது முக்கிய கட்டமான ஆல்ப்ப்ஸ் பனிமலை மீது உலவி வந்த நாள் "வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம் என்று பாரதியார்
பாடியது ஞாபகம் வந்தது பிரயன்ஸ் Brienz ,,, thun துன் என்ற இரு ஏரிகளுக்கிடையேஅமைந்த ஆல்ப்ஸ் சிகரங்களான மான்ச் எய்கர் , ஜுங்க்ப்ரோ Mounch, eiger, Jung frou சிகரங்களுக்குப் பிரயாணம் துவங்கியது ஜுங்க்பிரோ ரயில் நிலையம் ஐரோப்பாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் இரயில் நிலையம் ஹோட்டல் விலை மிக அதிகமானதால் வீட்டிலிருந்து தோசை மிளகாய்ப்பொடியுடன் ,எலுமிச்சம்பழ சாதம் கட்டிக்கொண்டு போனோம் தண்ணீர் கோகோகோலா போன்றது வாங்க சுமார் முன்னூரு ரூபாய் சிலவு செய்ய வேண்டும் 3454அடி உயரம் ரயில் போகிறது ஊட்டி போகும் இரயில் போல் உள்ளது இரயில் மலையைச் சுற்றி வளைந்து வளைந்துபோகிறது எல்லோருடைய கைகளிலும் கேமரா பைனாகுலர் இருந்தன
ஒரு ஆயிரம் அடி ஏறியவுடனேயே எனக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது இருந்தாலும் மேலே போய் பார்க்கும் ஆசை விடவில்லை அப்புறம் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாதே ஆகையால் துணிந்து மேலே சென்றேன் அங்கு நடுவே ஸ்டேஷனின் இறங்கி இயற்கையை ரசித்து பிறகு திருமபவும் இன்னொரு இரயிலில் ஏறிக்கொள்ளலாம் நங்களும் ஒருஇடத்தில் இறங்கி எங்கள் தோசையை ஒரு பிடி பிடித்தோம் நாங்கள் ஒரு புகை அல்லது மேக மண்டலத்தின் நடுவில் இருந்தோம் ஹனிமூன் தம்பதிகள் பனிமூன் தம்பதியாக மாறி பனியில் சறுக்கி விளையாடித் தன்னை மறந்தனர் சிலர் பந்துப்போல் பனியை அடித்து விளையாடினர்எங்குப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் புதுமணத் தமபதிகள் போல் வாழ்க்கை ரசித்து வாழ்வதற்கே என்பதை நிரூபித்தனர் முத்தம் கொடுப்பது சர்வ சகஜம்
எல்லோரும் காமக் கேளிக்கையில் ஈடுபடுவதால் வெடகமோ அல்லது ஒரு கூச்சமோ இருப்பதில்லை சாரட் குதிரை வண்டி நமக்கு மெல்ல ஊர்ந்து ஊரின் அழகைக் காட்டுகிறது சாவனீர் கடைகளும் பலவித உலோகங்கள் பலதரப்பட்ட மணிகள் விற்கின்றன மாலை ஒரு 6 மணிக்குள் இரயில் கீழே வந்து விடுகிறது பனி சறுக்கல் விளையாட்டு ஆண்டு முழுதும் உண்டு ஸ்கில்தாரின் என்ற மலையில் பிஸ்கிளோரியா piz gloria என்ற சுழலும் ரெஸ்டரான் உண்டு தவவர டிட்லிஸ் ரோட் ஏர் Titlis Rotair என்ற சுழலும் லிப்டும் உண்டு அதன் கண்ணாடிச்சுவர் வழியே ஆல்ப்ஸ் பனிசரிவு மலைத்தொடர்கள் உருகும் பனி என்ற பல ரசிக்கலாம் அங்கு பனியாலேயே ஒரு குகையும் செதுக்கி இருக்கிறார்கள் சிறுவர்கள் சிறுமிகள் சிவந்த முகத்துடன் தங்கமுடியுடன் ஆப்பிள் கன்னத்துடன் அழகாக் நம்மை வ்சீகரிக்கின்றன்ர் முதுகில் கட்டியத் தொட்டிலில் குழந்தையுடன் தாயும் வருகிறாள் இங்கு வந்தால் இங்குக் கிடைக்கும் சாக்கலேட்டுகளைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது நாங்கள் பல டப்பாக்கள் வாங்கினோம் பிரஞ்சு மொழியில் எழுதிய ஒரு டப்பாவைத் திறந்து ஒரு பெரிய சாக்கலேட்டைத் தின்னேன் அரம்பத்தில் அருமை ஆனால் போகப்போக ஒரு விசித்தரமான மணமும் கசப்பும்
வந்தது கூட வாந்தியும் வந்தது என்னடா என்று பார்த்தால் அதற்குள் விஸ்கி இருந்தது அத்துடன் ரம் ஜின் என்று பல ரகம் வைப்பார்களாம் ஆனால் மற்ற சாக்கலேட் சுவையோ அருமை எல்லா பொருளும் உள்ளே வைக்கிறார்கள் ,ஸ்விஸ் கடிகாரமும் மிகவும் பெயர் போனது இரத்தினம் ,முத்து பிளாட்டினம் என்று பலவகைகளில் செய்யப்பட்டு நம்மை ஈர்க்கின்றன பல ஆயிரங்களுக்கு கடிகாரம் இருகின்றன அதை வாங்குபவர்களும் இருக்கின்றனர் லண்டனில் மெழுகு பொம்மைக் கூடம் மிகப் பெயர் பெற்றது அந்த மெழுகு பொம்மையைக் கண்டுப்பிடித்தப் பெண்மணிமேடம் துஸ்ஸட் இந்த நாட்டவர்தான். அதேபோல் 1864ல் சுவட்சர்லாந்தில்தான் முதன் முதலில் போர்களின் நாசம் பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் எண்ணமும் உருவானது இதன் பலன் தான் டெட் கிராஸ் சொசைட்டி இதன் தலைமை அலுவலகம் ஜெனீவாவில் உள்ளது. இந்தத் டூரில் பல ஆயிரங்கள் சிலவு ஆனாலும் மனம் நிறைகிறது .
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
Cake Orders
Thanus
thanus&vijay
Aarau Time
