Asin

Asin

Kavalan song


SHAKIRA " WAKA WAKA.



Blog Archive

Blog Archive

Tamil HD Video Songs

பின்பற்றுபவர்கள்

kavalan

kavalan

காவலன் பாடல்கள்


Music

Kavalan vijay&asin

Kavalan vijay&asin

Thuppaki


Thiruvilayadal DVD Movie

சுறா பட ட்ரைலர் மட்றும் வீடியோ பாடல்கள்

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன. படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணணி செய்தி Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.


இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.

குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.

recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.

laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.

laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.

தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.

அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.

ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

kavalkaran

kavalkaran

English to Tamil Dictionary
Powered by Tamilcube.com



Semmozhi Album



Comedy




I Love Batticaloa

I Love Batticaloa

Kavalan

Kavalan

Thanus Tv

thanus

thanus

Tsunami Song Tamil


New video songs hd

Tamil Comedys HD

Kavalan Vijay&Asin

Kavalan Vijay&Asin

Nanban

Nanban

Visiters

Cake Orders

Cake Orders

Thanus

Thanus

thanus&vijay

thanus&vijay

Thirumalai DVD Movie