Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்
உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.1.மாரடைப்பு (Coronary heart disease)
2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)
3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)
4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)
5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)
6.HIV/AIDS
7.காச நோய் (Tuberculosis)
8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)
9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)
10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)
இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்
மொபைல் டேட்டா அழிந்து போனால்!
இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.
இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்றமுகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்
வருகிறது ஐ போன் 4
அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.
1.வடிவம்:
புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.
போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.
2. மைக்ரோசிம்:
இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.
3.டிஸ்பிளே:
ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
4. கேமரா:
இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.
5.சிப்:
ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.
6. கூடுதல் உதிரி வசதிகள்:
பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.
இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.
தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.
இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்
ஐரோப்பிய சாம்பியன் சுவிட்சர்லாந்திடம் கவிழ்ந்தது
உலக கிண்ண உதைப் பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற 'எச்'பிரிவின் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் சுவிட்சர்லாந்திடம் கவிழ்ந்தது.டர்பன் நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியை, தரவரிசையில் 24 ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற செய்தது.
இதுவரை ஸ்பெயின் அணிக்கு எதிரான எந்த போட்டியிலும் சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றது இல்லை. எனவே அந்த பழியை தீர்த்தும் கொள்ளும் வகையில் இன்றைய போட்டியில் ஸ்பெயினை தோல்வியுற செய்தது.
எனவே இந்த தோல்வியின் மூலம் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புடைய அணி என்று இரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், 2010 உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி ஐரோப்பாவின் பல நட்சத்திர வீரர்களையும் , பல அனுபவமிக்க வீரர்களையும் தன்னகத்தே கொண்ட போதும் தனக்கு கிடைத்த பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டமையால் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதல் பகுதி போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இருப்பினும் போட்டியின் இரண்டாவது பகுதியில், 52ஆவது நிமிடத்தில், ஸ்பெயினின் எல்லைக்குள் வந்து விழுந்த பந்தை சுவிடன் வீரர் எரன் டெர்டியோக் கோலை நோக்கி அடிக்க, அதனை மேலேறி வந்த ஸ்பெயின் கோலி காசில்லாஸ் தடுத்தார். அது அவருடைய கையில் இருந்து நழுவிச் செல்ல அதற்கெனவே காத்திருந்ததைப் போல ஓடிவந்த கெல்சன் பெர்ணான்டஸ் அதை கோலுக்குள் தட்டிவிட்டார். எனவே இந்த கோல் மூலம் ஸ்பெயினின் வெற்றி திசை திரும்பி விட்டது.
இருப்பினும் சோர்வுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஸ்பெயின் வீரர்கள் சுவிடன் கோல் கம்பத்துக்கு அருகில் மட்டுமே சென்று வரக்கூடியதாக இருந்தது. ஆனால் கோல் எதுவும் போட கிடைக்காதமையால் இறுதியில் 19 முறை ஸ்பெயினிடம் தோல்வியை தழுவிய சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண போட்டிகளில் முதல் முறையாக வெற்றியை தனதாக்கி கொண்டது.
இந்நிலையில் அடுத்த நடைபெற உள்ள போட்டியில் இன்று ஒரு கோல் போட்டு ஹோன்டர்ஸை வீழ்த்திய சிலி அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி சாம்பியன்
முக்கோண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.சிம்பாப்வேக்கு எதிராக இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் டில்சான் நாணய சுழற்சியில் வெற்றியீட்டினார்.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அணித் தலைவர் டில்சான் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதில் அணியின் துடுப்பாட்ட வீரர் தாய்பு 71 ஓட்டங்களையும், லம்ப் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பெர்னான்டோ 03 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 203 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இதில், அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணி தலைவர் தில்சான் 108 ஓட்டங்களையும், தரங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மிக அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தனது 07 ஆவது சதத்தைப் பெற்றுக் கொண்ட அணி தலைவர் தில்சான் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக சிம்பாப்வே அணியின் வீரர் டெய்லர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியின் திறமைகள் குறித்து கவலைப்படவில்லை : ஹிட்ஸ்பெல்ட்
சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியின் அண்மைக்கால திறமைகள் தொடர்பில் தாம் வருத்தமடையவில்லை என அணியின் பயிற்றுவிப்பாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் தெரிவித்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து அடைந்த தோல்விகள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மூன்று நட்பு ரீதியான பயிற்சி ஆட்டங்களிலும் சுவிட்சர்லாந்து தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளில் முக்கிய வீரர்கள் எவரும் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் கோல் போடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சாம்பியன்களான இத்தாலியுடன் சுவிட்சர்லாந்து நாளைய தினம் இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.
ஜெனீவா நகரில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
Cake Orders
Thanus
thanus&vijay
Aarau Time
